ஆப்பிள் நிறுவனம் புதன்கிழமை (20.05.2020) iOS 13.5 இன் பொது பதிப்பை (Public Edition) வெளியிட்டது, இது ஃபேஸ் மாஸ்க் அணியும்போது உங்கள் ஐபோனைத் திறப்பதை எளிதாக்குகிறது. ஃபேஸ் மாஸ்க் அணிந்துகொண்டு பெரும்பாலான நேரத்தை செலவிடும் மக்களுக்கு, குறிப்பாக முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு இது ஒரு முக்கியமான புதுப்பிப்பாகும். ஐபோன் எக்ஸ் உடன் தொடங்கி தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஐபோன்களில் ஃபேஸ் ஐடி வசதி கிடைக்கிறது.

Settings–> General –> Software update சென்று இப்பொழுதே உங்கள் ஐபோனை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
(பேஸ் மாஸ்க் அனிந்திருந்தால் ஆன்ட்ராய்டு போன்களில் Face Unlock வசதி செயல்படாது என்பது குறிப்பிடதக்கது)
அதோடு, ஆப்பிள் iOS 13.5 இல் புதிய COVID 19 வெளிப்பாடு (Covid-19 Exposure) அறிவிப்பு அம்சத்தையும் ஏற்ப்படுத்திவுள்ளது. கொரோனா வைரஸ் சோதிக்கப்பட்ட ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் நபர்களை எச்சரிக்க புளூடூத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மென்பொருள் இனைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் மற்றும் கூகிள் இரண்டும் கொரோனா வைரஸ் தொடர்பு தடமறிதல் (Corona virus contact tracing) மென்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன, இந்த நேரத்தில், ஐந்து கண்டங்களில் கிட்டத்தட்ட 22 நாடுகள் அதன் மென்பொருளை உபயோகிக்க வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்த அம்சத்தை உங்கள் ஐபோனில் Settings > Privacy > Health > COVID-19 Exposure Logging ல் நீங்கள் செயல்படுத்திக் கொள்ளலாம்.
இந்த கட்டுரை பற்றிய சந்தேகங்களையோ, உபரி தகவல்களையோ கீழுள்ள கமென்ட் பகுதியில் பதிவு செய்யவும். நன்றி.