Dark Web இல் விற்பனைக்கு அரை மில்லியனுக்கும் அதிகமான ஜூம் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இனைய பாதுகாவலர்கள் கவலைகளைத் தூண்டியுள்ளது. சில கணக்கு விவரங்கள் கூட இலவசமாக வழங்கப்படுகின்றன.
இது மாதிரியான விபரங்கள் credential stuffing தாக்குதல்கள் மூலம் பெறப்படுகின்றன.
5,30,000 ஜூம் பயனாளிகளின் விவரங்களை ஒவ்வொன்றும் ஒரு பைசாவிற்கும் குறைவாக வாங்க முடிந்தது என எஸ்சி மீடியா பிரிட்டனுக்கு உளவுத்துறைக்கு உறுதிப்படுத்தியது,
Zoom சீன நாட்டு Online Video Conferencing செய்ய பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பம். இந்த COVID – 19 இக்கட்டான சூழலில் பெரும்பாலான மென்பொருள் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர்
ஒரு வாரத்திற்கு முன்னர் இந்த இணையத்தளம் அனைவரது இனைய பயன்பாட்டையும் சீனாவில் இருக்கும் தனது server க்கு திருப்பி விட்டு அனைவரது செயல்பாடுகளும் கண்காணிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. Zoom இந்த குற்றச்சாட்டை தொழில்நுட்ப கோளாறு என மறுத்து வரும் நிலையில். பயனாளிகளின் முழு விபரங்கள் இணையத்தில் வெளியானது அந்த நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
Zoom பயனர்கள் ஒரே மாதிரியான கடவுச்சொல்லை (Password) வேறு எங்கும் பயன்படுத்தக்கூடாது, ஆனால் அதே கடவுச்சொல் அவர்களின் மின்னஞ்சல் கணக்கிற்கும் பயன்படுத்தப்படாமல் இருப்பது மிகவும் முக்கியமானது, அல்லது தாக்குபவர் பாதிக்கப்பட்டவரிடமிருந்து அழைப்புகளை அனுப்ப முடியும், இதனால் தாக்குதல் இன்னும் ஆபத்தானது
எந்த பயனாளர்களுக்கு தங்கள் ஈமெயில் களவாடப்பட்டிருக்கிறதா என்பதை கீழ்கண்ட முகவரியில் சோதனை செயது கொள்ளலாம்
https://haveibeenpwned.com/
https://amibreached.com/
Find me, if my details are secured