சிகார் வடிவிலான விண்மீன் பொருள் ‘ஓமுவாமுவா’ – இது 2017 இல் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து எப்போதுமே ஒரு புதிராகவே இருந்து வருகிறது.

இது ஒரு பழைய வால்மீன் அல்லது ஒருவித அன்னிய தொழில்நுட்பமா என்பது குறித்து பிரம்மாண்டமான கலந்துரையாடல்கள் நடந்துள்ளன. தொலைதூர நட்சத்திரத்திற்கு மிக அருகில் சுற்றித் திரிந்தபோது, ​​ஒரு கிரகத்தில் இருந்து சிதைந்திருக்கலாம் என்றும் விவாதிக்கப்பட்டது.இருப்பினும் ஒரு சமீபத்திய ஆய்வில் ஓமுவாமுவா உண்மையில் ஒரு ஹைட்ரஜன் பனிப்பாறையாக இருக்கலாம் என்று கருத்து உறுதிபட சொல்லப்பட்டுள்ளது.

Oumuamua

Yale and the University of Chicago ஆராய்ச்சியாளர்கள், ஒரு ஆய்வில் ஓமுவாமுவா ஒரு ஹைட்ரஜன் பனிப்பாறை என்று கூறியுள்ளனர். ArXiv இணையதளத்தில் ஒரு ஆய்வு கட்டுரை அனுமானத்தின் அடிப்படையில் கூறுவதாவது “ஓமுவாமுவா விந்தையான பண்புகள் கொன்டவை,அதில் கணிசமான பகுதியில் மூலக்கூறுகள் ஹைட்ரஜன் (H2) பனியைக் கொண்டுயுள்ளது” என்று.

சிவப்பு நிறமுடைய ‘ஓமுவாமுவா’ அக்டோபர் 14, 2017 முதல் ஜனவரி 2, 2018 வரை விஞ்ஞானிகள் கண்காணித்தனர், அதன் பிறகு மிகவும் சக்திவாய்ந்த தொலைநோக்கிகளைப் பயன்படுத்து கண்டறிவது கூட மிகவும் சிரமமாகி போனது . இது அரை மைல் (800 மீட்டர்) நீளமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது,

Oumuamua Interstellar

ஓமுவாமுவாவை முதன்முதலில் ஹவாய் பல்கலைக்கழகத்தின் பான்-ஸ்டார்ஆர்எஸ் 1 தொலைநோக்கி கண்டறிந்தது. “ஓமுவாமுவா” என்றால் ஹவாய் மொழியில் ஒரு பெரிய தூரத்திலிருந்து வரும் ஒரு தூதர் என்று பொருள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here