வால் நட்சத்திரங்களில் பிரகாசமான ஒன்றின் பெயர் பெர்சீட்.

பெர்சீட் விண்கல் மழை இந்த ஆண்டின் மிகவும் அற்புதமாக வானில் தெரிய கூடிய விண்கல் மழை ஆகும், குறிப்பாக வடக்கு அரைக்கோளத்தில் தெரியயுள்ளது, நீங்கள் உலகளவில் எங்கு வாழ்ந்தாலும் இதை காணலாம், 2020 பெர்சீட் விண்கல் மழை ஆகஸ்ட் 11 காலையில் அதிக எண்ணிக்கையிலான விண்கற்களை வானில் காணலாம் . பெர்சாய்டுகள் பிரகாசமாக இருக்கும், அவற்றால் நிலவொளியை கூட வெல்ல முடியும். பிரகாசமான நிலவின் வெளிச்சத்தை விட இரவு வானில் விண்கற்களின் பிரகாசத்தை காணலாம் ,விண்கல் மழை உச்சத்தில் மணிக்கு 40 முதல் 50 விண்கற்கள் வரை நீங்கள் காணலாம். சில ஆண்டுகளைப் போல ஒரு மணி நேரத்திற்கு 100 க்கு மேல் விண்கல் மழையை காண்ப்பீர்கள்

ஜூலை 17 முதல் பெர்சீட் விண்கற்கள் வானம் முழுவதும் பரவி வருகின்றன. ஆகஸ்ட் 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் அதிகாலை வானத்தில் நிலவொளி குறைந்து காணப்படும்

வால்மீன் Swift-Tuttle ல் இருந்த துண்டுகள் பூமியின் மேல் வளிமண்டலத்தில் மணிக்கு 130,000 மைல் (210,000 கி.மீ) வேகத்தில் செல்கின்றன, வேகமாக நகரும் பெர்சீட் விண்கற்களால் இரவு நேரத்தை ஒளிரச் செய்கின்றன.

பெர்சீட் பார்ப்பதற்கான பொதுவான விதிகள்:
சிறப்பு உபகரணங்கள், அல்லது விண்மீன்களை பற்றிய பொது அறிவு எதுவும் தேவையில்லை.
நிகழ்ச்சியை ரசிக்க இருண்ட வானம், திறந்த வானத்தைக் கண்டறியவும். திறந்த வானம் அவசியம், ஏனெனில் இந்த விண்கற்கள் வானத்தின் குறுக்கே பல திசைகளிலும் பல விண்மீன்களுக்கு முன்பாகவும் பறக்கின்றன.
நினைவில் கொள்ளுங்கள்… எல்லா நல்ல விஷயங்களும் காத்திருப்பவர்களுக்கு மட்டுமே வரும். விண்கற்கள் இயற்கையின் ஒரு அற்புதமான பகுதி

https://newslanded.com/2020/08/09/perseid-meteor-shower-2020-12-august/
https://earthsky.org/astronomy-essentials/everything-you-need-to-know-perseid-meteor-shower

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here