உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்களில் ஒருவரான ஹோண்டா, U.K, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள தொழிற்சாலைகளில் 200,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் கொண்டுள்ளது. தற்பொழுது, ஹோண்டாவின் உலகளாவிய செயல்பாடுகள் ஒரு ransomware தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய கார் தயாரிப்பாளர் எல்லாவற்றையும் ஆன்லைனில் திரும்பப் பெற போராடுவதால் துருக்கி, பிரேசில் மற்றும் இந்தியாவில் உள்ள ஹோண்டா ஆலைகள் செயல்பாட்டை நிறுத்தியுள்ளன. நிறுவனம், சில உற்பத்தி வசதிகள், வாடிக்கையாளர் மற்றும் நிதி சேவை நடவடிக்கைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்றும் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் “Snake ransomware” என அழைக்கப்படுகிறது. இந்த வகையான தாக்குதலில், ஒரு நிறுவனத்தின் கோப்புகளை ஹேக்கர் Encrypt (குறியாக்கம்) செய்வதும், பின்னர் பணத்திற்கு ஈடாக அவற்றை Decrypt (மறைகுறியாக்க) முன்வருவதும் அடங்கும்.

உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, மொத்தத்தில் சைபர் தாக்குதல் 11 ஹோண்டா ஆலைகளை பாதித்துள்ளது – அமெரிக்காவில் ஐந்து உட்பட. அவர்கள் விரைவில் பிரச்சினையை தீர்க்கும் முயற்சியில் உள்ளனர்.

ஹோண்டாவை போன்று ஐடி நிறுவனமான Cognizant, சைபர் காப்பீட்டாளர் Chubb மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தக்காரர் CPI போன்ற நிறுவனங்களும் இந்த ஆண்டு ransomware ஆல் பாதிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here