நம்மில் பலர் தொலைபேசியோ கணினியோ பயன்படுத்த ஆரம்பித்தால் நேரம் செல்வதே தெரியாது. அவ்வாறு உங்கள் விலைமதிப்பற்ற நிமிடங்களை எந்தெந்த செயலிகள் மற்றும் தளங்கள் உறிஞ்சுகின்றன என்பதை தானாகவே கண்காணித்து உங்களுக்குத் தெரிவிக்க ஏராளமான கருவிகள் உள்ளன. Android மற்றும் iOS இன் மிகச் சமீபத்திய கைபேசி பதிப்புகளில் இந்த நோக்கத்திற்காக உள்ளமைக்கப்பட்ட சில கருவிகளைக் கொண்டுள்ளன. எனினும் பிற மூன்றாம் தரப்பு செயலிகளும் ஏராளமாக உள்ளன. அவற்றின் சிறந்த சில (இலவச) செயலிகளை நுட்பம் உங்களுக்கு பரிந்துரைக்கிறது.

Screen Time ( Built-in iOS, macOS)

ஆப்பிளின் Screen Time அம்சம், பிற செயலிகளிலும் உங்கள் தொலைபேசியிலும் நீங்கள் செலவழித்த நேரத்தை ஒட்டுமொத்தமாக கண்காணிக்கிறது. இதை IOS / iPadOS, macOS க்கான Settings இல் காணலாம். எந்தெந்த செயலிகளில் நீங்கள் அதிக நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை இந்த கருவி உங்களுக்குக் காண்பிக்கும், மேலும் நீங்கள் உள்நுழைந்துள்ள அனைத்து ஆப்பிள் சாதனங்களிலும் உங்கள் புள்ளிவிவரங்களைக் காணலாம்.

உதாரணமாக, நீங்கள் எந்த காரணமும் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் பல மணிநேரம் செலவிடுகிறீர்கள் என்று நினைத்தால், உங்கள் செயலி போதைக்கு எதிராக போராட தினசரி செயலி பயன்படுத்தும் நேர வரம்புகளை அமைக்கலாம். மேலும் எந்தெந்த செயலிகள் அதிக அறிவிப்புகளைக் (Notifications) கொண்டுள்ளன என்பதையும் காணலாம்.

Digital Wellbeing (Built-in Android)

ஆப்பிளில் Screen Time போன்று Android Settings இல் நீங்கள் Digital Wellbeing ஐ காணலாம். திரையில் முன் தோன்றும் கண்ணோட்ட விளக்கப்படத்தில் உங்கள் நேரம் எங்கே போய்விட்டது, எந்த செயலிகள் உங்கள் கவனத்தை ஈர்க்கின்றன என்பதற்கான விரிவான முறிவைக் காணலாம். IOS ஐப் போலவே, ஒரு செயலியில் செலவு செய்யும் நேர வரம்பையும் செயலி அனுப்பிய அறிவிப்புகளின் எண்ணிக்கையையும் மாற்றலாம்.

QualityTime (freemium for Android)

Androidக்கான நிறுவப்பட்ட நேர கண்காணிப்பாளர்களில் சிறந்த ஒன்று QualityTime. இந்த கருவி மொத்த செயலிகளின் பயன்பாட்டை காட்டுகிறது, மேலும் ஒவ்வொரு செயலியையும் நீங்கள் எத்தனை முறை பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் காட்டுகிறது.

QualityTime தினசரி பயன்பாட்டு எச்சரிக்கை போன்ற பிற அம்சங்களுடன் வருகிறது, எனவே நீங்கள் இன்ஸ்டாகிராமில் (அல்லது மற்றொரு செயலியில்) நீண்ட நேரம் இருக்கும்போது பாப்-அப் செய்தி பெறுவீர்கள். மேலும் குடும்ப பயன்பாடுகள் அல்லது அலுவலக நேரம் போன்ற தனிப்பயன் சுயவிவரங்களையும் நீங்கள் அமைக்கலாம், இந்த குறிப்பிட்ட நேரத்தின்l போது சில செயலிகளை பயன்படுத்துவது தடைசெய்யப்படுகின்றன.

Moment (freemium for Android, iOS)

Android மற்றும் iOS இரண்டிலும் Moment கிடைக்கிறது. இது உங்கள் ஒட்டுமொத்த தொலைபேசி பயன்பாட்டை கண்காணிக்க உதவும். மேலும் இந்த கருவியின் மூலம் செயலியில் பெற்றோர் கட்டுப்பாட்டு அம்சங்களை இயக்கலாம்.

நீங்கள் எந்த செயலியை பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் பார்க்க iOS அனுமதிக்காது. ஆனால் iOS பேட்டரி பயன்பாட்டுத் திரையின் Screen Shots ஐ எடுக்கும்படி கேட்டு இந்த கட்டுப்பாட்டைச் சரிசெய்ய Moment முயற்சிக்கிறது.

StayFree (freemium for Android)

கைபேசியில் பயன்படுத்தும் செயலியின் பல்வேறு தகவல்களை StayFree உங்களுக்கு வழங்குகிறது. எனவே உங்கள் Android தொலைபேசியில் நீங்கள் எவ்வாறு உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்கள் என்பதை ஆழமாக ஆராய விரும்பினால், இது உங்களுக்கான செயலியாகும். மேலும் உலகெங்கிலும் உள்ள பலர் நீண்ட நேரத்தை எந்த செயலியில் செலவு செய்கின்றனர் என்பதை உங்களுடன் ஒப்பிட்டு காணலாம்.

இதில், நாள் அல்லது வாரம் முழுவதும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட செயலியைப் பயன்படுத்தும் நேர அளவை அமைக்க வேண்டும். எனவே ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு அப்பால் நீங்கள் செயலியைப் பயன்படுத்தும்போது நினைவூட்டல்களை கொண்டு எச்சரிக்கையைப் பெறுவீர்கள்.

RescueTime (freemium for Android, iOS, web)

உங்கள் தொலைபேசி பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கு முன்பே RescueTime அதன் பயனர்களின் பழக்கத்தை விடாமுயற்சியுடன் திட்டமிட்டு வருகிறது. மேலும் நீங்கள் எந்த பயன்பாடுகள் மற்றும் தளங்களுக்கு அடிமையாக இருக்கிறீர்கள் என்பதைப் பார்ப்பதற்கான சிறந்த விருப்பங்களில் ஒன்றாக இது உள்ளது. அனைத்தையும் மிகத் தெளிவான, எளிதான அறிக்கைக்களில் தருகிறது.

WhatPulse (freemium for Windows, macOS)

இது கணினிகளுக்காக வடிவமைக்கப்பட்டது. எந்த செயலி அதிக நேரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை காட்டும். பிரீமியம் விருப்பத்திற்கு (ஒரு மாதத்திற்கு $1.50) நீங்கள் பணம் செலுத்தினால், உங்கள் செயல்பாட்டின் அழகிய தோற்றமுள்ள சில விளக்கப்படங்களைப் பெறலாம், இல்லையெனில் எளிமையான அட்டவணையைப் பெறுவீர்கள். ஒருவேளை உங்களுக்குத் தெரியாமல், உங்கள் அலைவரிசையின் பெரும்பகுதியை எந்தெந்த செயலிகள் பயன்படுத்துகின்றன என்பதையும் இது உங்களுக்குக் கூறுகிறது.

Webtime Tracker (free for Chrome)

இந்த ஆட்-ஆன் மூலம் உங்கள் ஆன்லைன் நேரம் (Chrome இல்) எவ்வாறு பயன்படுகிறது என்பதைக் கண்டறிய உதவும். இது உங்கள் தினசரி உலாவலைளை ஸ்மார்ட் தோற்ற வரைபடங்கள் மற்றும் அறிக்கைகளில் காட்டுகிறது. இதன் மூலம் வாரம் அல்லது மாதத்தில் உங்கள் பயன்பாடு எவ்வாறு மாறுபடுகிறது என்பதை நீங்கள் காணலாம், நீங்கள் அதிகம் பார்வையிடும் தளங்களுக்கான தினசரி சராசரியையும் பெறுலாம். இதற்கிடையில், சேகரிக்கப்பட்ட எல்லா தரவும் கணினியின் உள்ளே வைக்கப்படுவதாகவும், வேறு எங்கும் அனுப்பப்படாது என்றும் இதன் டெவலப்பர் உறுதியளிக்கிறார்.

Firefoxக்கு இது போன்று சரியான செயலி எதுவும் இல்லை, ஆனால் Mind the Time என்னும் செயலி அம்சம் குறைவாக இருந்தாலும் உலாவளை கண்காணிப்புக்கு எளிதாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here