உலகின் மிகவும் பிரபலமான கோழி உணவகத்தில் ஒன்று KFC. தற்பொழுது KFC, உலகின் முதல் ஆய்வகத்தால் தயாரிக்கப்பட்ட கோழி நக்கெட்ஸ் (Chicken nuggets) ஐ உருவாக்க முயற்சித்து வருகிறது. இந்த யோசனை KFC இன் “எதிர்கால உணவகம்” கருத்தின் ஒரு பகுதியாகும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

KFC, ரஷ்ய நிறுவனமான 3D Bioprinting Solutions உடன் இணைந்துள்ளது. அவர்கள், கோழி செல்கள் மற்றும் தாவரப் பொருட்களைப் பயன்படுத்தி கோழி இறைச்சியை “அச்சிடும்” பயோபிரிண்டிங் தொழில்நுட்பத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். KFC, ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்கும், அதில் ரொட்டி மற்றும் மசாலாப் பொருட்கள் அடங்கும், இதனால் நக்கெட்ஸ் KFC இன் தனித்துவமான Signature சுவையை அடைகிறது.

KFC விவரிக்கும் இந்த பயோபிரிண்டிங் செயல்முறை விலங்கு பொருட்களைப் பயன்படுத்துகிறது என்பது கவனிக்கத்தக்கது, எனவே அது தயாரிக்கும் எந்த உணவுகளும் சைவமாக இருக்காது. ஆனால் தரநிலை கோழி இறைச்சியை விட பயோபிரிண்டட் நக்கெட் உற்பத்தி செய்வதற்கு மற்றும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் நட்பாக இருக்கும் என்கிறது KFC நிறுவனம்.

“மருத்துவத்தில் ஆரம்பத்தில் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட 3D பயோபிரிண்டிங் தொழில்நுட்பங்கள் இப்போதெல்லாம் இறைச்சி போன்ற உணவுகளை தயாரிப்பதில் பிரபலமடைந்து வருகின்றன” என்று 3D Bioprinting solutions இன் இணை நிறுவனர் Yusef Khesuani, KFC கூட்டாட்சியை அறிவிக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். “எதிர்காலத்தில், இத்தகைய தொழில்நுட்பங்களின் விரைவான வளர்ச்சியானது 3D அச்சிடப்பட்ட இறைச்சி தயாரிப்புகளை மேலும் சுலபமாக உற்பத்தி செய்ய அனுமதிக்கும், மேலும் KFC உடனான எங்கள் ஒத்துழைப்பின் விளைவாக உருவாக்கப்பட்ட செல் அடிப்படையிலான இறைச்சி தயாரிக்கும் இந்த தொழில்நுட்பம் சந்தையில் தொடங்குவதை துரிதப்படுத்த உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் கூறியுள்ளார்.

இந்த சோதனை பயோபிரிண்டட் நக்கெட்ஸ், மாஸ்கோவில் இந்த ஆண்டு இறுதியில் கிடைக்கும் என்று KFC கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here