ஸ்மார்ட்போன் அல்லது கேமராவைப் பயன்படுத்தி ஒரு படம் எடுக்கப்படும்போது சில மெட்டாடேட்டா புலங்கள் பெரும்பாலும் அதனுடன் இணைக்கப்படுகின்றன. இந்த புலங்களில் கேமராவின் மாதிரி, அது எடுக்கப்பட்ட நேரம், ஃபிளாஷ் பயன்படுத்தப்பட்டதா, ஷட்டர் வேகம், குவிய நீளம், ஒளி மதிப்பு மற்றும் இருப்பிடம் ஆகியவை அடங்கும். இதன் மூலம், படங்களிலிருந்து புவி இருப்பிடத் தரவை மீட்டெடுக்க சில வழிகள் உள்ளன.
நாம் ஒரு படத்தைப் பதிவேற்றி, கிடைக்கக்கூடிய மெட்டாடேட்டா தகவல்களைப் பார்க்க readexifdata.com அல்லது Jefryஇன் எக்ஸிஃப் போன்ற ஆன்லைன் கருவியைப் பயன்படுத்தலாம். இதன் கீழே, அதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.
முதலில், உங்கள் கம்ப்யூட்டரில் http://exif.regex.info/exif.cgi என்ற தளத்திற்கு செல்லவும்.
- முதலில், போட்டோவை … அந்த Choose File- Boxல் தரவேற்றம் செய்யவும்.
- பிறகு, View Image Data- Iconஐ கிளிக் செய்யவும்.
- அந்த படத்தின், அனைத்து தகவல்களும் கீழே உள்ள படம் மாதிரி கிடைக்கும்.
இனி நீங்களும் இதை போன்றே எந்த புகைப்படத்தையும் அதில் புதைந்துள்ள தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்…!
உங்கள் கருத்தை அறிந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது தொடர்பான கேள்விகள் இருப்பின் கமென்ட் பிரிவில் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், நன்றி!
Great infromation
usefull information