நீங்கள் சிறுவயதில் உங்கள் விரலால் உங்கள் நண்பரின் முதுகில் ஒரு வார்த்தையை எழுதி அதை கண்டுப்பிடிக்க சொல்லி விளையாடி இருப்பீர்கள். உங்கள் நண்பரும் ஒவ்வொரு எழுத்தாக யூகித்து இறுதியில் அந்த வார்த்தையை கண்டுப்பிடிப்பார். அதே போன்று விஞ்ஞானிகள் பார்வையற்றவர்களின் மூளையில் நேரடியாக எழுத்துகளை காட்சிப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

UCLA மற்றும் பேய்லரின் ஆராய்ச்சியாளர்கள் குழு, மின் தூண்டுதலைப் பயன்படுத்தி மனித மூளையில் நேரடியாக எழுத்து மற்றும் வடிவங்கள் வரைவதற்கான ஒரு முறையை உருவாக்கியுள்ளது. இதன் விளைவாக பார்வையை முற்றிலுமாக இழந்த நபர்கள் வடிவங்களை “காட்சிகளாக” உணர முடியும்.

பின்வரும் வீடியோ சயின்ஸ் நியூஸிலிருந்து வந்தது, இதில் ஒரு பயனர் தங்கள் மூளை உள்வைப்பு வழியாக உள்ளீடுகளைப் (Inputs) பெறுவதைக் காட்டுகிறது, பின்னர் அவர் முன்உள்ள ஒரு திரையில் வரைவதன் மூலம் அவர்கள் பார்ப்பதை சரியாக விளக்குகிறது:

இந்த செயல்முறை, மின்சாரத்தைப் பயன்படுத்தி மூளையின் பின்புறத்தில் அமைந்துள்ள Visual cortexஸில் பொருத்தப்பட்ட மின்முனைகளைத் தூண்டும். இது Dynamic தூண்டுதலின் மூலம் செயல்படுகிறது. அதாவது முழுமையான வார்த்தை அல்லது வடிவமாக அனுப்புவதற்கு பதிலாக, ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு வடிவமாக மூளையில் நேரடியாக நிகழ்நேரத்தில் அனுப்புகின்றனர். எனவே பெறுநர் தெரிவிக்கப்படும் வடிவத்தை எளிதில் தீர்மானிக்க முடியும்.

தற்போதைக்கு, இந்த தொழில்நுட்பம் சோதனை நிலையில் தான் உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் தங்கள் செயல்முறையை இரண்டு பார்வையற்றவர்களின் மீது சோதித்துள்ளனர். அவர்கள் 80 முதல் 93 சதவிகிதம் துல்லியத்துடன் தங்கள் மனதில் சரியான வடிவத்தை உணர்ந்துள்ளனர். அவர்கள் நிமிடத்திற்கு 86 சரியான பதில்களை அளித்துள்ளனர்.

C மற்றும் Z போன்ற எளிய வடிவங்களை மட்டுமே ஆராய்ச்சியாளர்கள் சோதித்திருந்தாலும், வெறும் எண்கள் மற்றும் எழுத்துக்கள் பயன்படுத்தி செய்யக்கூடிய விஷயங்கள் ஏராளம் உள்ளன. எனவே, இது பார்வையற்றோருக்கான அணுகலில் மிக பெரிய புரட்சிக்கு வழிவகுக்கும்.

Video Courtesy : Science News Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here